இந்தியா

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

DIN

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பாரத ராஷ்டிர சமிதி எம்.பி. நம நாகேஷ்வர ராவ்வும், மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சிவதாசன், கம்யூனிஸ்ட் எம்.பி.  பினோய் விஸ்வம் உள்ளிட்டோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த மறுக்கப்பட்டால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளில் அமளியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT