இந்தியா

தற்போதைய நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் கடைசி பட்ஜெட்!

DIN

தற்போதைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டடம், குடியரசு துணைத் தலைவா் மாளிகை உள்ளிட்டவற்றைக் கட்டும் பணி ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின்கீழ் இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. கடந்த 2020-இல் டிசம்பா் மாதத்தில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

இதற்கிடையே, இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாததால் பழைய வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையே பழைய வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT