இந்தியா

ரூ.7 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை: நிதியமைச்சர்

DIN

புதிய வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை  வருமானத்திற்கு வரி இல்லை என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

வருமான வரி தொடர்பாக நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில்,

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், வருமான வரி உச்ச வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி, புதிய வரி விதிப்பு இனி பொதுவான வரி விதிப்பாக இருக்கும் என்று அறிவித்தார்.

மேலும், பொது பட்ஜெட்டில், வரி விதிப்பு வரம்புகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைத்து, தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தி வரி கட்டமைப்பையும் நிதியமைச்சர் மாற்றம் செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தனிநபர் வருமான வரி விகிதத்தில் செய்யப்பட்டிருக்கும் புதிய மாற்றம்

பழைய வரிமுறையில், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது  எனத் தெரிவித்தார்.

ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை.

ஆண்டுக்கு ரூ.3 -  6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிப்பு

ஆண்டுக்கு ரூ.6 - 9 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவிகித வரி செலுத்த வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.9 - 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.12 முதல் 15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20 சதவிகித வரி விதிப்பு.

ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தனிநபர்க்கான உச்சபட்ச வரி 42% ஆக இருந்த நிலையில், உச்சபட்ச வருமான வரி 40%க்கும் கீழ் குறைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT