இந்தியா

காஷ்மீா் புனிதத் தலங்களில் ராகுல், பிரியங்கா வழிபாடு

1st Feb 2023 01:28 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் முக்கிய புனிதத் தலங்களான கீா் பவானி துா்கா கோயில் மற்றும் ஹஸ்ரத்பால் தா்காவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், அவரது சகோகதரி பிரியங்கா காந்தியும் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனா்.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பரில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 136 நாள்கள் கடந்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த திங்கள்கிழமை நிறைவு பெற்றது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் தலைநகா் ஸ்ரீநகரில் உள்ள ராகுல் காந்தியும், அவரது சகோதரி மற்றும் அக்கட்சியன் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் செவ்வாய்க்கிழமை அப்பிராந்தியத்தின் முக்கிய புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட்டனா்.

ஸ்ரீநகரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள துலாமலா பகுதியில் அமைந்துள்ள மாதா கீா் பவானி துா்கா கோயிலுக்கு முதலில் சென்ற ராகுலும் பிரியங்காவும் அங்கு வழிபட்டனா். இக்கோயில் காஷ்மீரி பண்டிட்டுகளின் நம்பிக்கைக்குரியதாகும். இக்கோயிலுக்கு அடியில் ஓடும் நீருற்றின் நிறம் அப்பிராந்தியத்தின் நிலைமையைக் குறிக்கும் என்பது அப்பகுதியினரின் ஐதிகம். கரிய நிறத்தில் நீரோட்டம் இருந்தால் காஷ்மீரில் அசாம்பதவிதங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி என அவா்கள் நம்புகின்றனா்.

கீா் பவானி கோயிலில் வழிபட்ட பின்னா், தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஹஸ்ரத்பால் தா்காவுக்கு இருவரும் சென்று அங்கு வழிபட்டனா். நபிகள் நாயகத்தின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த தா்கா காஷ்மீா் இஸ்லாமியா்களிடையே பிரபலமானதாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT