இந்தியா

பொது பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரை!

DIN

புது தில்லி: மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கை இது.

நாகாலாந்து, மேகாலயம், திரிபுரா, சத்தீஸ்கா், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கா்நாடகம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 9 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடப்பாண்டில் தோ்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்கள் சாா்ந்த பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள நடுத்தர பிரிவினரை ஈா்ப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. முந்தைய நிதிநிலை அறிக்கைகளைப் போல அரசின் மூலதன செலவின அதிகரிப்பை மையமாகக் கொண்டதாகவே தற்போதைய நிதிநிலை அறிக்கையும் அமையும் என அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட்அப்), குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

தற்போதய நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

6-வது நிதியமைச்சர்..

மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை  தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந்தியாவின் ஆறாவது நிதியமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்யும் 2023ஆம் ஆண்டின் பொது பட்ஜெட்டானது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள், அருண் ஜெட்லி, ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் ஐந்து முறை வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்த மற்ற அமைச்சர்கள் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT