இந்தியா

பட்ஜெட் 2023: மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

DIN

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

இதற்கு முன்னதாக, இன்று காலை நிதியமைச்சகத்துக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், இணையமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு நிர்மலா சீதாராமன் வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த கூட்டத்தில், நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த பின்னர், காலை 11 மணிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் முன்னிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT