இந்தியா

பட்ஜெட் 2023: இதுதான் நடுத்தர மக்களுக்கான சலுகையா? 

DIN


புது தில்லி: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி இந்த அண்டு 66 சதவீதம் அதிகமாக ஒதுக்கி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, பொது பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு பல சலுகைகளைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதற்குக் காரணம், தானும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், நடுத்தரக் குடும்பத்தினர் சந்திக்கும் சிக்கல்களை நன்கு அறிவேன் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் குறித்த அறிவிப்பின்போது குறிப்பிட்டிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியும், வரும் நாள்களில் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாலும், நடுத்தர மக்களுக்காக பல நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில்தான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு 2023 - 24ஆம் நிதியாண்டில் ரூ.79,000 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2022 - 23ஆம் நிதியாண்டில் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இத்திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் தகுதிவாய்ந்த 80 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் என்று பார்த்தால்..

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.9000 கோடி தொகுப்பு நிதி.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம்.
புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு   உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT