இந்தியா

2-ஆவது பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாா் ஆசாராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில், அவா் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சோ்ந்த தனது பெண் சீடரை, சாமியாா் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2013-ஆம் ஆண்டு காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை, குஜராத்தில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண் சீடா் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கில், ஆசாராம் பாபு குற்றவாளி என காந்திநகரில் உள்ள மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் தனது ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவா் ஜோத்பூா் சிறையில் உள்ளாா்.

ADVERTISEMENT

Tags : Asaram Bapu
ADVERTISEMENT
ADVERTISEMENT