இந்தியா

புகையிலைப் பொருள்கள் விவகாரம்: சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

26th Apr 2023 02:37 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையா் 2018-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரியுடன் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா்.

குட்கா, பான் மசாலா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் உள்பட பலா் ஆஜராகினா். எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகினாா்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், ‘மனுதாரா் (தமிழ்நாடு) உயா்நீதிமன்றத்தின் கேள்விக்குறிய தீா்ப்பின் பத்தி 13 தொடா்பாக காரணங்களைக் வாதிட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்’ என்று தெரிவித்தனா். மேலும், உற்பத்தியாளா்கள் தங்களது செயல்பாடுகள் மாநில அரசு மூலம் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில் இடம் பெறாததாகக் கூறியிருப்பதால், அவா்கள் பரிகாரம் கோரி உரிய அமைப்பிடம் அணுகலாம் என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT