வந்தே பாரத் ரயிலின் ஜன்னல்களில், பாலக்காடு எம்பி ஸ்ரீகாந்தனின் புகைப்படம் உள்ள போஸ்டரை காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து நேற்று காலை தொடங்கிவைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே 586 கி.மீ. தூரம் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரயில் நேற்று பாலக்காடு மாவட்டம் சொர்னூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தபோது, ரயிலை வரவேற்க நின்றிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் எம்பியின் புகைப்படம் உள்ள போஸ்டரை ரயிலின் ஜன்னல்களில் ஒட்டினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.