இந்தியா

ஜார்க்கண்டில் உறைவிடப் பள்ளியில் 148 மாணவர்களுக்கு கரோனா

26th Apr 2023 05:22 PM

ADVERTISEMENT

 

ஜார்க்கண்டில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 148 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து துணை ஆணையர் விஜய் ஜதவ் கூறுகையில், 

கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா(கே.ஜி.பி.வி) பள்ளியில் திங்கள் கிழமையன்று 69 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று 148 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

ADVERTISEMENT

மாவட்டத்தில் துமாரியா, போட்கா மற்றும் ஜாம்ஜெட்பூர் ஆகிய இடங்களில் உள்ள கேஜிபிவி உறைவிடப் பள்ளிகளில் இன்று மேலும் 79 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. 

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. 

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, ரயில்வே நிலையம், பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT