இந்தியா

அம்பானி ஊழியருக்கு ரூ. 1,500 கோடி மதிப்புடைய வீடு பரிசு

25th Apr 2023 07:52 PM

ADVERTISEMENT


ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு ரூ. 1,500 கோடி மதிப்புள்ள வீட்டைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்த பரிசைப் பெற்ற மனோஜ் மோடி என்பவர் முகேஷ் அம்பானிக்கு வலது கையாக செயல்படுபவர்.

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தனது நிறுவனம் மற்றும் இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவ்வபோது பல சலுகைகளை வழங்கி வருகிறார். 

அந்தவகையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் நீண்ட நாள்களாகப் பணியாற்றி வந்த மனோஜ் மோடி என்பவருக்கு ரூ.1,500 கோடி மதிப்புடைய வீட்டைப் பரிசாக வழங்கியுள்ளார். 

1980ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த மனோஜ், முகேஷ் அம்பானியின் வலதுகையாக வணிக உலகில் அறியப்படுகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல வணிக ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் மனோஜ் மோடி முக்கிய நபராகவும் விளங்கி வருகிறார்.

ADVERTISEMENT

இவருக்கு மும்பை நேபன் கடற்கரை சாலையில் உள்ள ரூ.1,500 கோடி மதிப்புள்ள வீட்டை முகேஷ் அம்பானி தற்போது பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடு ஒரு லட்சத்து 7 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. 22 மாடிகளைக் கொண்டது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT