இந்தியா

ராஜஸ்தான் அரசின் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது: கெலாட்

25th Apr 2023 05:41 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை கூறினார்.

கலதேரா பணவீக்க நிவாரண முகாமுக்கு வருகை தந்த கெலாட் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

கெலாட் அரசாங்கத்தின் லட்சியமான பணவீக்க நிவாரண முகாம் திட்டம் பத்து முக்கியமான திட்டங்களின் கீழ் பதிவு செய்வதற்காக திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு உத்தரவாத அட்டை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT