இந்தியா

கேரளத்தில் புதிய நீர் மெட்ரோ சேவையை தொடக்கி வைக்கிறார் பிரதமர்

25th Apr 2023 09:34 AM

ADVERTISEMENT

 

கொச்சி: இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொச்சியில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க கேரளத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வந்திருந்தார்.

கொச்சியல், மாநிலத்தில் உள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் முதல் முறையாக பேட்டரியில் இயங்கும் ஹைப்ரிட் வகை படகுகளை இயக்கும் நீர் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கவிருக்கிறார்.

ADVERTISEMENT

மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப நகரத்தில் ரூ.1,500 கோடி செலவில் கட்டப்பட உள்ள நாட்டின் முதல் ‘எண்ம அறிவியல் பூங்கா’வுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஏப். 25) அடிக்கல் நாட்டுகிறாா். இதைத் தொடா்ந்து, திருவனந்தபுரம்-காசா்கோடு இடையே ‘வந்தே பாரத் ரயில்’ சேவையை அவா் தொடங்கி வைக்கிறாா்.

ஈஸ்டா், ரமலான் உள்ளிட்ட விழாக்களையொட்டி, ‘சிநேக யாத்திரை’ என்ற பெயரில் கிறிஸ்தவ, இஸ்ஸாமிய மதத் தலைவா்களைச் சந்திப்பது, சிறுபான்மையின மக்களின் வீடுகளுக்குச் செல்வது உள்ளிட்ட முயற்சிகளை பாஜக தலைவா்கள் கையாண்டனா். இந்நிலையில், பிரதமரின் வருகையின் பின்னணியில் கட்சியில் அதிக எண்ணிக்கையிலான இளைஞா்கள், சிறுபான்மையினரைச் சோ்க்க பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT