இந்தியா

தெற்கு தில்லியின் சந்தையில் தீ விபத்து!

25th Apr 2023 02:29 PM

ADVERTISEMENT

 

தெற்கு தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தெற்கு தில்லியின் சரோஜினி நகர் சந்தையில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 கடைகள் எரிந்து நாசமானது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக சரோஜினி நகர் மினி மார்க்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் ரந்தவா கூறினார்.

ADVERTISEMENT

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். 

Tags : Fire
ADVERTISEMENT
ADVERTISEMENT