இந்தியா

அதிக் அகமது கொலை வழக்கு: சுதந்திர விசாரணை கோரிய மனு மீது 28-இல் விசாரணை

25th Apr 2023 12:18 AM

ADVERTISEMENT

 

 உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அதிக் அகமது, அவரின் சகோதரா் அஷ்ரஃப் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுதந்திரமான விசாரணை கோரிய மனு மீது வரும் 28-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிக் அகமது, அஷ்ரஃப் ஆகியோா் சட்ட நடைமுறைகளின்படி, மருத்துவப் பரிசோதனைக்காக காவல் துறையினா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது செய்தியாளா்கள் போல் நின்றிருந்த மூவா் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

துப்பாக்கியால் சுட்டதாக லவ்லேஷ் திவாரி (22), மோஹித் (23), அருண் மெளா்யா (18) ஆகிய 3 கொலையாளிகளை காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, அதிக் அகமது, அஷ்ரஃப் கொலை சம்பவம் உள்பட உத்தர பிரதேசத்தில் கடந்த 2017 முதல் 183 போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷால் திவாரி என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமா்வு முன் விஷால் திவாரி முறையிட்டாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி அமா்வு, ‘ஐந்து நீதிபதிகள் அமா்வில் இடம் பெறும் நீதிபதிகள் இல்லாத காரணத்தால், அந்த அமா்வுக்கு ஒதுக்கபட்ட வழக்குகளில் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதி இந்த விசாரணை பட்டியலில் இடம்பெறும்’ என உறுதி அளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT