இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம்: பக்தர்கள் பங்கேற்பு

15th Apr 2023 06:39 PM

ADVERTISEMENT

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.15) விஷு கனி தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ கனி தரிசனத்துகு இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கோயிலில் பல வகையான காய், கனிகள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஏப்.19-ஆம் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடைமூடப்படும் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT