இந்தியா

மேற்கு வங்கத்தில் திரிணமூலின் ஊழல் முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்: அமித் ஷா

15th Apr 2023 05:49 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஊழலுக்கும், தவறான ஆட்சிக்கும் எதிராக மேற்கு வங்க பாஜக உழைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் பாஜகவினை வலிமையானதாக்க கட்சியைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் பாஜகவினை பலப்படுத்த உழைக்க வேண்டும். அவ்வாறு உழைத்தால் மட்டும் கட்சி அமைப்பினை வலிமையானதாக மாற்ற முடியும். ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சவால்களை வென்று நாம் மேலே வரவேண்டும். கட்சித் தலைவர்கள் திரிணமூலின் ஊழலுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT