இந்தியா

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

15th Apr 2023 12:49 PM

ADVERTISEMENT


நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (சனிக்கிழமை - ஏப். 15) நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்திவருகிறது.

அதன்படி 2023-24-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெறவுள்ளது. நீட் தோ்வுக்கு  இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாா்ச் 6-ஆம் தேதி தொடங்கி கடந்த 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மாணவா்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அவகாசம் மேலும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்காதவா்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். அன்றையதினம் 11.59 மணிக்குள் தோ்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தேசிய தோ்வு முகமையின் முதுநிலை இயக்குநா் (தோ்வுகள்) சாதனா பராசா் தெரிவித்திருந்தார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT