இந்தியா

தனக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேஜரிவால் உரிய நேரத்தில் பதிலளிப்பார்: பிகார் முதல்வர்

15th Apr 2023 04:39 PM

ADVERTISEMENT

அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிரான அனைத்து கேள்விகளுக்கும் அவர் சரியான நேரத்தில் பதிலளிப்பார் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை தொடர்பாக அரவிந்த் கேஜரிவாலிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். அவர் சிறந்த மனிதர். தில்லியில் பல முன்னேற்றங்களுக்கான வேலையை அவர் செய்துள்ளார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் அவர் உரிய நேரத்தில் பதில் அளிப்பார். இதுபோன்ற காரணங்களுக்காகவே நாங்கள் நாட்டிலுள்ள பல கட்சிகளை மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைத்து வருகிறோம். நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT