இந்தியா

கோவா பொதுக்கூட்டத்தில் நாளை உரையாற்றுகிறார் அமித்ஷா!

15th Apr 2023 03:27 PM

ADVERTISEMENT

 

தெற்கு கோவாவில் உள்ள போண்டா பகுதியில் நிகழும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை உரையாற்றுகிறார். 

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் எம்பி நரேந்திர சவாய்கர் கூறுகையில், 

போண்டா பகுதியில் நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

2019ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இழந்த 160 தொகுதிகளில் தெற்கு கோவா தொகுதியும் உள்ளது. எனவே, கட்சி இந்தத் தொகுதிகளில் கவனம் செலுத்தியுள்ளது. மத்தியத் தலைவர்கள் ஏற்கனவே தெற்கு கோவாவில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்று அவர்  கூறினார். 

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் பிற்பகல் 3.15 மணியளவில் கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிவித்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT