இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை!

30th Sep 2022 12:02 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்கவுண்டரில் 2 உள்ளூர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சோபியான் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடுத்தடுத்து என்கவுண்டர்கள் நடந்தன.

சோபியானின் சித்ரகம் பகுதியிலும், பாரமுல்லாவில் உள்ள பட்டானின் எடிபோரா பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து, தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கினர். அதன்பின்னர் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

ADVERTISEMENT

படிக்க: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்? திரை விமர்சனம்

பாரமுல்லா நடவடிக்கையில் இரு பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். உள்ளூர் பயங்கரவாதிகள் இருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர்கள்.

அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை  நடைபெற்று வருகின்றது என்று காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT