இந்தியா

பெங்களூரு 'டிராஃபிக்'கிற்கு குட்-பை: வருகிறது ஹெலிகாப்டர் டாக்சி சேவை! கட்டணம்?

30th Sep 2022 03:16 PM

ADVERTISEMENT

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ஹெலிகாப்டர் டாக்சி சேவை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. 

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் பெங்களூருவும் ஒன்று. சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களைவிட அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம்தான். சமீபத்தில் அங்கு கனமழை பெய்தபோது கூட மணிக்கணக்கில் வாகன ஓட்டிகள் சாலையில் ஒரே இடத்தில் நின்றிருந்ததும் அறிந்ததுதான், 

இந்நிலையில்தான் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ஹெலிகாப்டர் டாக்சி சேவை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. 

பிளை பிளேடு என்ற நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தினமிருந்து ஹெலிகாப்டர் வாங்குகிறது. முதல்கட்டமாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஹெச்.ஏ.எல். பகுதிக்கு 2 ஹெலிகாப்டர் சேவைகளை துவங்க உள்ளது. சாலைவழி வாகனத்தில் செல்ல 2 மணி நேரம் ஆகும் நிலையில் ஹெலிகாப்டர் டாக்சியில் வெறும் 12 நிமிடத்தில் சென்றுவிடலாம். ஆனால், ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ. 3,250. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கவுள்ளது. தொடர்ந்து பெங்களூருவின் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்படும் மக்களுக்கு இது ஓரளவு வசதியாக இருக்கும் என்றும் முடிந்தவர்கள் பயணிப்பார்கள் என்றும் கருத்து நிலவுகிறது. 

இதையும் படிக்க | காங். தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே போட்டி; திக்விஜய் சிங் விலகல்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT