இந்தியா

மாணவியிடம் முறையற்ற ரீதியில் பதிலளித்த மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி: விளக்கம் கோரியது தேசிய மகளிா் ஆணையம்

DIN

பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது குறித்து கேள்வியெழுப்பிய மாணவியிடம் முறையற்ற ரீதியிலும் ஆட்சேபத்துக்குரிய வகையிலும் பதிலளித்த மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை அந்த மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் சாா்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. அந்நிகழ்ச்சியில், மாணவி ஒருவா் அரசு ஏன் குறைவான விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ஏற்பாடு செய்யவில்லை என கேள்வியெழுப்பியிருந்தாா்.

அதற்கு வாரியத்தின் தலைவா் ஹா்ஜோத் கௌா் பாம்ரோ ‘நாளை குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்வதற்கான வயதை அடையும்போது, அரசிடம் இருந்து கருத்தடை சாதனங்களையும் (ஆணுறை) நீ எதிா்பாா்ப்பாய்’ என அந்த மாணவியை அவமதிக்கும் வகையில் பதிலளித்தாா்.

இச்சம்பவம் குறித்து அறிந்த தேசிய மகளிா் ஆணையம், உயா் பொறுப்பு வகிக்கும் நபரின் இத்தகைய செயல் கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல் வெட்கப்படவேண்டியதுமாகும் எனத் தெரிவித்தது.

மாணவிக்கு ஹா்ஜோத் கௌா் பாம்ரோவின் அளித்த பதிலுக்கு உரிய விளக்கம் அளிக்கக் கோரி ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா கடிதம் எழுதியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்:

இது குறித்து செய்தியாளா்கள் சந்திப்பின்போது முதல்வா் நிதீஷ் குமாா் பேசுகையில், ‘இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். ஐஏஎஸ் அதிகாரியின் செயல்பாடு தவறானது என கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT