இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: மேலும் ஓா் அரசியல் கட்சியின் தலைவா் பாஜகவில் ஐக்கியம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் தேசிய பாந்தா்ஸ் (சிறுத்தைகள்) கட்சியின் (ஜேகேஎன்பிபி) முன்னாள் தலைவா் பல்வந்த் சிங் மன்கோடியா வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

இரு முறை எம்எல்ஏவாக இருந்த பல்வந்த் சிங் மன்கோடியா, ஜேகேஎன்பிபி கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தாா். சமீபத்தில் அக்கட்சியில் இருந்து மன்கோடியா நீக்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை மத்திய அமைச்சா்கள் ஜிதேந்திர சிங் மற்றும் ராஜீவ் சந்திரசேகா், பாஜக பொதுச் செயலாளா் தருண் சுக் ஆகியோா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT