தமிழ்நாடு

தமிழகத்தில் நவ.6-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி!

30th Sep 2022 04:03 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் நவம்பர் 6-ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது. 

சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி காவல்துறை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துள்ளனர். தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில், மத்திய அரசால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. 

படிக்க: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்? திரை விமர்சனம்

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6-ம் தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஆர்எஸ்எஸ் அனுமதி மறுத்ததை எதிர்த்த உயர்நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

மேலும், அனுமதி மறுத்தால் நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்ய அவமதிப்பு வழக்கு அக்.31-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT