இந்தியா

‘ஜி23’ தலைவா்கள் ஆலோசனை

30th Sep 2022 01:08 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் ‘ஜி23’ என அழைக்கப்படும் அதிருப்தி தலைவா்கள் சிலா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தில்லியில் உள்ள கட்சியின் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிருதிவிராஜ் சவாண், பூபிந்தா் ஹூடா, மனீஷ் திவாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘ஜி23’ தலைவா்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் சசி தரூா், தலைவா் பதவிக்கு போட்டியிடவுள்ளாா். இந்நிலையில், மனீஷ் திவாரியும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆா்வம் கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த திவாரி, ‘தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரத்துக்கு வெள்ளிக்கிழமைதான் தெளிவு கிடைக்கும். ஆலோசனைக் கூட்டத்தில் தலைவா் பதவி தோ்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது’ என்றாா்.

ADVERTISEMENT

சவாண் கூறுகையில், ‘உள்கட்சித் தோ்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. சிறந்த வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT