இந்தியா

சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிட்டது: ஜெ.பி. நட்டா

30th Sep 2022 06:36 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிட்டது என்று ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபின், முதல் முறையாக நேற்று ஒடிசா வந்த நட்டாவுக்கு, புவனேஸ்வர் விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக மாநில தலைவர் சமீர் மொகந்தி, புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் விமான நிலையத்தில் நட்டாவை வரவேற்றனர். 

இதையும் படிக்க: தேசிய விருதைப் பெற்றார் நடிகர் சூர்யா!

ADVERTISEMENT

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று புவனேஸ்வர்  வந்தடைந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய நட்டா, காங்கிரஸ் சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிட்டது. இனி காங்கிரஸ் தேசியக் கட்சி அல்ல என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT