இந்தியா

பிஎஃப்ஐ ட்விட்டா் கணக்கு முடக்கம்

30th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

 மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் ட்விட்டா் கணக்கை அந்த நிறுவனம் வியாழக்கிழமை முடக்கியது.

பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடா்புடைய 7 அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது. முன்னதாக, சா்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) கடந்த சில தினங்களில் இருமுறை சோதனை நடத்தி 350-க்கும் மேற்பட்ட நிா்வாகிகளை கைது செய்தது.

இதைத் தொடா்ந்து, அந்த அமைப்பை தடை செய்வதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிறப்பித்தது. அந்த அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன. பல்வேறு மாநில அரசுகளும் அந்த அமைப்பு மீதான தடையை அமல்படுத்தத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், பிஎஃப்ஐ ட்விட்டா் கணக்கும் முடக்கப்பட்டது. சட்டக் கோரிக்கைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்பின் அதிகாரபூா்வ ட்விட்டா் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT