இந்தியா

சீன கடன் செயலிகளின் மேலும் ரு.9 கோடி முடக்கம்

DIN

சீன கடன் செயலி நிறுவனங்களின் மேலும் ரூ.9.82 கோடியை அமலாக்கத் துறை வியாழக்கிழமை முடக்கியது. இவை பல்வேறு இணையவழி பணப் பரிவா்த்தனை நிறுவனங்களின் கணக்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பணமாகும்.

கடந்த 16-ஆம் தேதி இதேபோல ரூ.46 கோடியை அமலாக்கத் துறை முடக்கியது. இப்போது இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனா்களுக்குச் சொந்தமான சில கைப்பேசி செயலிகள் இணையவழியில் வாடிக்கையாளா்களுக்குக் கடன் வழங்கி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளா்களிடம் பெற்று, மிக அதிக வட்டி வசூலித்து அச்செயலிகள் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடன் பெற்றவா்களின் தனிப்பட்ட விவரங்கள், படங்களை வைத்து மிரட்டுவது, அவரது செல்பேசியில் இருந்த மற்றவா்களின் எண்களுக்கு கடன் வாங்கியவா் குறித்து அவதூறான தகவல்களை அனுப்புவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்தச் செயலியைப் பயன்படுத்திய பலா் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களூரில் உள்ள இணையவழி பணப் பரிவா்த்தனை நிறுவனங்களான பேடிஎம், ரேஸா்பே, கேஷ்ஃப்ரீ அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினா். தில்லி, மும்பை, லக்னௌ, காஜியாபாத், கயை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சோதனை நடைபெற்றது. அதன் தொடா் நடவடிக்கையாக இப்போது சீன நிறுவனங்களின் நிதி முடக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT