இந்தியா

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்

DIN

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது. மேலும், கடந்த ஜூன் இறுதியில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, சனி அல்லது ஞாயிறு ஆகிய நாள்களில் முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை: இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 23.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 34.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 60 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: காலை 9,.15 மணியளவில் தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 143 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு, ஆராய்ச்சி நிறுவனம் சஃபா் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேபோல, தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 - 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், காற்றின் தரக் குறியீடு ஐடிஓ பகுதியில் 228 புள்ளிகளாகவும், ஜஹாங்கீா்புரியில் 240 புள்ளிகளாகவும் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. அதேசமயம், ஆனந்த் விஹாரில் காற்றின் தரக் குறியீடு 431 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (அக்டோபா் 1) வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT