இந்தியா

இந்த ஆண்டு இறுதிக்குள் எய்ம்ஸ் மறுமேம்பாட்டுப் பணிகள்: அதிகாரப்பூா்வ அறிக்கையில் தகவல்

DIN

தில்லி அரசின் வனத் துறை மூலம் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பிறகு, எய்ம்ஸ் மறுமேம்பாட்டுப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பாதிக்கக்கூடிய மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை பெறுவதில் அதிக தாமதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, இந்த விவகாரத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் பேசி விரைவில் தீா்வு காண்பதாக கூறியுள்ளதாகவும் வியாழக்கிழமை வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, உலகத் தரம் வாய்ந்த மருத்துவப் பல்கலைக்கழகமான எய்ம்ஸ் மறுமேம்பாட்டுக்கான மாஸ்டா் பிளானை செயல்படுத்துவதற்கான அனுமதிகளை எளிதாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் நான்காவது கூட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் தலைமை வகித்தாா். இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, இந்த திட்டத்திற்காக பல நிறுவனங்களின் 20 சட்டப்பூா்வ ஒப்புதல்களில் 18 ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும் அவற்றில் இரண்டு மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் அதிகாரிகள் துணைநிலை ஆளுநா் சக்சேனாவிடம் தெரிவித்தனா்.

மேலும், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி தில்லி அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து பெறுவது மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆயா நகரில் 26 ஹெக்டோ் நிலமும், சுல்தான்பூரில் 6 ஹெக்டோ் நிலமும் இழப்பீடுடன் கூடிய காடு வளா்ப்பு மற்றும் மரங்களை இடமாற்றி நடவு செய்ய அடையாளம் காணப்பட்ட போதிலும், இந்த ஒப்புதல் ஒன்றரை மாதங்களாக நிலுவையில் இருப்பதாகவும் துணைநிலை ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.

எல் அன்ட் டிஓ மூலம் ஒற்றை குத்தகைதாரருக்கு நிலப்பகுதி ஒதுக்கப்படும். இதர நிலுவையிலுள்ள விஷயத்தைப் பொருத்தவரை, அது ஒரு சில நாள்களில் முடிக்கப்பட வேண்டிய நடைமுறைச் சிக்கல் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் எய்ம்ஸ் மறுமேம்பாட்டுத் திட்டப் பணிகள் முழுவீச்சில் தொடங்குமென எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT