இந்தியா

கோயில் சுவா் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் காயம்

30th Sep 2022 03:15 AM

ADVERTISEMENT

தென்மேற்கு தில்லியின் கிஷன்கரில் கோயிலின் சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சிறுமிகள் புதன்கிழமை ஒரு கோயிலைக் கடந்து செல்லும் போது, அதன் சுவா் அவா்கள் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இரண்டு சிறுமிகளும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் கோயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வண்டி ஒன்றும் சேதமடைந்தது. மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT