இந்தியா

காபூலில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 19 பேர் பலி!

30th Sep 2022 03:17 PM

ADVERTISEMENT

 


ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் இன்று காலை தற்கொலைப்படை நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

மேற்கு காபூலின் டேஷ்ட்-இ-பார்ச் பகுதியில் சிறுபான்மையினரான ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்திருக்கும் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். 

படிக்க: சேலம், தர்மபுரி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை!

ADVERTISEMENT

அப்போது, திடீரென தற்கொலைப்படை நடத்தப்பட்ட தாக்குதலில் 19 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்துத் தகவலறிந்ததும், கல்வி மையம் மற்றும் மருத்துவமனைகளில் மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர். 

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. 

ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு கல்வி நிலையம் மீது தற்கொலைத் தாக்குதலில் மாணவர்கள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

தலிபானின் எதிரியான இஸ்லாமிய அரசு குழுவின் தாக்குதலுக்கு ஹசாரா குழுவினர்  அடிக்கடி இலக்காவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT