இந்தியா

முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு

29th Sep 2022 09:26 PM

ADVERTISEMENT

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமங்களின் பெயரில் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ஏற்கெனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 10 ஆண்டுகளில் 1733 சூழலியல் ஆர்வலர்கள் கொலை: கவலையளிக்கும் ஆய்வு முடிவுகள்

அதன்படி அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையின் போரிவலி பகுதியில் உள்ள அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் வீட்டருகில் 
வெடிபொருள்கள் அடங்கிய வாகனம் நிறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT