இந்தியா

திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

DIN

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருக்கலைப்பு உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே என்ற நிலையை மாற்றுவது அவசியம். ஆனால் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.

கருக்கலைப்பு உரிமையை பொறுத்தவரை, திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்னும் வேறுபாடு இல்லை.  உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை ஒழங்குபடுத்துவது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT