இந்தியா

மாணவர்கள் தங்களை நாட்டின் எதிர்காலமாக பார்க்கிறார்கள்: மணீஷ் சிசோடியா

29th Sep 2022 07:24 PM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகள் தங்களை இந்த நாட்டினுடைய எதிர்காலம் என்று நினைப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர் என தில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

தில்லியின் அரசுப் பள்ளிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து பேசிய அவர், பள்ளி மாணவர்கள் அவர்களது வாழ்வில் என்னவாக வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க: நானே வருவேன் - பார்க்கலாமா? - திரை விமர்சனம்

இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது: “ தில்லியின் கல்விப் புரட்சி மிகப் பெரிய சாதனை ஆகும். அது மாணவர்களிடையே உள்ள தன்னம்பிக்கையினை அதிகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தாங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பினைக் கொடுப்பதற்கும் தயாராக உள்ளனர். மாணவர்களிடம் ஒரு அணியாக செயல்படும் பண்பு, தலைமைப் பண்பு ஆகியவை வளர்ந்துள்ளது” என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT