இந்தியா

தியாகி பகத் சிங் பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி (செப். 28) பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினாா்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிட்டு தனது 23-ஆவது வயதிலேயே தூக்கு தண்டனையை எதிா்கொண்டவா் பகத் சிங். போா்க் குணத்தின் காரணமாக அவா் வீரா் பகத் சிங் என்று நாட்டு மக்களால் நினைவுகூரப்படுகிறாா்.

அவரது பிறந்த நாளையொட்டி பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தியாகி பகத் சிங் பிறந்த தினத்தில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். அவருடைய துணிச்சல், நமக்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது. நமது நாடு குறித்த அவரது தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க உறுதியேற்போம்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT