இந்தியா

சூரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

29th Sep 2022 12:52 PM

ADVERTISEMENT


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் குஜராத் பயணத்தின் ஒரு பகுதியாக சூரத்தில் இன்று பேரணி நடத்தினார். 

தனது சொந்த மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி ரூ.29,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

இன்று காலை சூரத் விமான நிலையத்தில் தரையிறங்கிய மோடியை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றார். பிறகு, கோதாதராவில் இருந்து லிம்பியாத் பகுதிக்கு 2.5 கிலோமீட்டர் சாலை வழியாக வந்த மோடி பேரணியில் ஈடுபட்டார். 

படிக்க: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.முரளிதர்!

ADVERTISEMENT

பிரதமர், தனது காருக்குள் அமர்ந்து அதிகாலையில் இருந்தே சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த மக்களை கை அசைத்து வரவேற்றார்.

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, மேலும் ஆளும் பாரதிய ஜனதா (பாஜக) கட்சி மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

உலகின் முதல் சிஎன்ஜி முனையம் மற்றும் பாவ்நகரில் பிரவுன்ஃபீல்ட் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சூரத்திலிருந்து பாவ்நகருக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். 

பாவ்நகர் நகரின் ஜவஹர் சௌக் பகுதியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன், நகரத்தில் 2 கீ.மீ சாலையில் பேரணி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT