இந்தியா

பிஎஃப்ஐ பொதுச் செயலாளர் அப்துல் சத்தாரிடம் என்ஐஏ விசாரணை

29th Sep 2022 11:16 AM

ADVERTISEMENT


பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் தேசிய விசாரணை முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 

பல்வேறு இடங்களில் மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டனர்.

இந்த சோதனைகளில் முடிவில் தமிழகம், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 350க்கும் அதிகமான  பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 

ADVERTISEMENT

படிக்க | பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு பிஎஃப்ஐ அமைப்பை 5 ஆண்டுகள் தடை செய்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக நேற்று கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் பிஎஃப்ஐ அமைப்பை முழுமையாக கலைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு கேரள காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணைக்காக அப்துல் சத்தாரை தேசிய விசாரணை முகமை(என்ஐஏ)-யிடம் ஒப்படைத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT