இந்தியா

சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் துணைத் தலைவராக அனில்குமார் தேர்வு! 

29th Sep 2022 11:41 AM

ADVERTISEMENT

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஏ.கே.அனில்குமார் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின்(ஐஏஎஃப்) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

அனில் குமார் தற்போது இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் (ஐஎஸ்டிஆர்ஏசி) இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

1951இல் நிறுவப்பட்ட சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, 72 நாடுகளில் 433 உறுப்பினர்களுடன் உலகின் முன்னணி விண்வெளி ஆலோசனை அமைப்பாகும். 

ADVERTISEMENT

படிக்க: அக்.2-ல் எந்த அமைப்புகளும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை!

ஐஏஎப் அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளி அறிவியலின் வளர்ச்சியைத் தீவிரமாக ஊக்குவிக்கிறது. விண்வெளி தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களைப் பரப்புவதை ஆதரிக்கிறது என்று தேசிய விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. 

சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் இஸ்ரோவின் விண்வெளி முயற்சிகளுக்கான அங்கீகாரம் என்று பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இஸ்ரோ ஒரு சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT