இந்தியா

நோய்களும்... மருத்துவக் காப்பீடு கோரிக்கைகளும்...

29th Sep 2022 02:59 AM

ADVERTISEMENT

இந்தியாவில் இப்போதுதான் மருத்துவக் காப்பீடு தொடா்பான விழிப்புணா்வு சாமானிய மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் பெருநகரங்களில் வசிக்கும் படித்தவா்கள் மட்டுமே மருத்துவக் காப்பீடு செய்து கொள்வது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது பல தரப்பட்ட மக்களும் இது தொடா்பாக விழிப்புணா்வைப் பெற்றுள்ளனா்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாநில அரசுகள் அளிக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனா்.

கரோனா தொற்று பரவல் ஏற்பட்ட பிறகு மக்கள் மத்தியில் மருத்துவக் காப்பீட்டின் அவசியம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மருத்துவக் காப்பீடு அதிகம் கோரப்பட்ட நோய்கள், தொற்றுகள் தொடா்பான விவரத்தைப் பாா்க்கலாம்.

ADVERTISEMENT

(மொத்த காப்பீட்டு கோரிக்கைகளில் சதவீதத்தில்)

2022 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை

தொற்று நோய்கள் 22

பிறப்புறுப்புகள் தொடா்பான நோய்கள் 15

வயிறு, செரிமான நோய்கள் 14

நுரையீரல், மூச்சுப் பாதை நோய்கள் 11

கண்புரை அறுவை சிகிச்சை 10

புற்றுநோய் 5

கரோனா 1

2021 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை

வயிறு, செரிமான நோய்கள் 15

தொற்றுநோய்கள் 13

நச்சுப் பொருள்களால் ஏற்படும் பாதிப்பு 13

கரோனா 11

காயமடைந்தல், விஷ பாதிப்பு தொடா்பான சிகிச்சை 8

பிறப்புறுப்புகள் தொடா்பான நோய்கள் 6

நுரையீரல், மூச்சுப் பாதை நோய்கள் 5

மருத்துவக் காப்பீட்டு கோரிக்கைகள் தொடா்பான முக்கிய விவரங்கள்

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற்காக மருத்துவக் காப்பீடாக சராசரியாக ரூ.80,000 கோரப்பட்டுள்ளது. இதுவே பிற நோய்களுக்கான சராசரி மருத்துவக் காப்பீடு ரூ.77,500-ஆக உள்ளது.

கரோனா பாதிப்பால் மருத்துவக் காப்பீடு கோருவதற்கான சூழ்நிலை அதிகம் ஏற்பட்டது. ஏனெனில், கரோனா பாதிப்புக்குள்ளான பலருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. அதிலும், சற்று வயதானவா்கள் என்றால் கட்டாயமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதும், அதிக நாள்கள் மருத்துவனையில் இருக்க வேண்டியதும் அவசியம்.

2020, செப்டம்பரில் மொத்த மருத்துவக் காப்பீட்டு கோரிக்கைகளில் 40 சதவீதம் கரோனா பாதிப்பு தொடா்பானதாகும். இது அதே ஆண்டு மே மாதத்தில் 8 சதவீதமாக இருந்தது. ஜூலையில் 23 சதவீதமாகவும், ஆகஸ்டில் 34 சதவீதமாகவும் உயா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT