இந்தியா

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி

29th Sep 2022 05:47 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் கந்து வட்டிக் கொடுமையால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியதாவது: “ தற்கொலை செய்து கொண்ட இருவரும் சதீஷ் சந்திரா (42 வயது) மற்றும் அவரது மனைவி மன்சா தேவி (40 வயது) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் பசந்த் விகார் காலனியில் வசித்து வருகின்றனர். சதீஷ் சந்திரா மின்விசிறியில் தூக்கிட்டபடி இருந்தார். அவரது மனைவி அருகில் உள்ள கட்டிலில் கழுத்தில் கயிற்றுடன் இறந்து கிடந்தார்.

இதையும் படிக்க: 'நட்புரீதியான போட்டி' - சசி தரூருடன் திக்விஜய் சிங் சந்திப்பு

தூக்கு கயிற்றில் தொங்கிய சதீஷ் சந்திராவின் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் ஒருவரிடம் ரூ.1 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.1.50 லட்சமும் கடன் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வாங்கியக் கடனை முழுவதும் செலுத்திவிட்ட பின்பும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் அவர்களிடம் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும் அந்தக் கடிதத்தில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.” என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT