இந்தியா

நாட்டில் புதிதாக 4,272 பேருக்கு கரோனா; 27 பேர் பலி

29th Sep 2022 11:28 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4,272 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,83,360 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,611 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும்,  4,474  பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40,750-ஆக குறைந்துள்ளது. இதுவரையில் 4,40,13,999 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இதையும் படிக்க: பிஎஃப்ஐ பொதுச் செயலாளர் அப்துல் சத்தாரிடம் என்ஐஏ விசாரணை

ADVERTISEMENT

இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  21,63,248  பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 218.17 கோடி தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.72 சதவிகிதமாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT