இந்தியா

'நட்புரீதியான போட்டி' - சசி தரூருடன் திக்விஜய் சிங் சந்திப்பு

29th Sep 2022 05:04 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 

கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன்(செப். 30) முடிவடைகிறது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினார் கெலாட்

ADVERTISEMENT

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர். 

இந்நிலையில், போட்டியாளர்கள் இருவரும் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். 

இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: திக்விஜய் சிங் அறிவிப்பு

சந்திப்பு குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று பிற்பகல் என்னை சந்திக்க வந்த திக்விஜய் சிங்கை வரவேற்றேன். கட்சியின் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். எங்கள் போட்டி சண்டை அல்ல, சக ஊழியர்களுக்கு இடையேயான நட்புரீதியான போட்டி என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். நாங்கள் இருவரும் விரும்புவது யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பதுதான்' என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிக்க | கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன  நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT