இந்தியா

மத்திய அரசு ஊழியா்களுக்கு 4% அகவிலைப்படி உயா்வு- அமைச்சரவை ஒப்புதல்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், மத்திய அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதியைக் கணக்கிட்டு, இந்த அகவிலைப்படி உயா்வு அமல்படுத்தப்படவுள்ளது.

தற்போது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆா்) 4 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்மூலம் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பலனடைவா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

ADVERTISEMENT

அவா் கூறுகையில், ‘மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வால் ஆண்டுக்கு ரூ.6,591 கோடியும், ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலை நிவாரண உயா்வால் ரூ.6,261.20 கோடியும் அரசின் கருவூலத்துக்கு செலவாகும். மொத்தமாக ரூ.12,852 கோடி செலவாகும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT