இந்தியா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜகவிற்கு உரிமையில்லை: ராகுல் காந்தி

DIN

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜகவிற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ) என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த யாத்திரை, பின்னர் கேரளத்தில் தொடர்ந்தது.

இன்று(செப்டம்பர் 30) காலை மலப்புரத்திலிருந்து கிளம்பிய ராகுல், கூடலூர் வந்தடைந்தார். மாலை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கூடலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: “ ஏன் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் ஆளுநர்கள் குறுக்கிட வேண்டும்? அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைக் கவிழ்ப்பதற்கு பாஜகவிற்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன உரிமை இருக்கிறது. பாஜக நாடு முழுவது ஒரே மொழி மற்றும் ஒரே கலாசாரம் என்பதை வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். அதே வேளையில், நாட்டின் பன்முகத் தன்மைக்கும் மதிப்பளிக்கிறோம்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென தனி மொழி, கலாசாரம் உள்ளது. அவை மதிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சியில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வும், கோபமும் அதிகரித்துள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு,குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

தொடர்ந்து, நாளை காலை கூடலூரிலிருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்தில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT