இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன்: கமல்நாத்

IANS

போபால்: காங்கிரஸ் கட்சித் தலைவராக விருப்பமில்லை என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில தலைவருமான கமல்நாத், மத்தியப் பிரதேச தேர்தலில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஏற்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் இருந்து எனது கவனத்தை திசைதிருப்ப நான் விரும்பவில்லை. வரும் ஆண்டில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, இதுபோன்ற விஷயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. இது ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்துக்கும் மேல் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

அதுபோல, ராஜஸ்தானில் நிலவும் சூழல் குறித்தும் தனது தனிப்பட்ட கருத்துகளை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்ட கமல்நாத், சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இருவருமே எனது நண்பர்கள். எனவே, இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பதவிக்கு அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT