இந்தியா

ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி

28th Sep 2022 04:22 PM

ADVERTISEMENT


மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் துவக்கத்தில் 81.53 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு பிறகு 40 காசுகள் குறைந்து இதுவரை வரலாறு காணாத வகையில் ரூ.81.93 காசுகளாக சரிந்தது. 

வெளிநாட்டு சந்தைகளில் டாலரின் மதிப்பு வலுவாக இருந்ததாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாலும் ரூபாய் மதிப்பு சரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!

ADVERTISEMENT

திங்கள்கிழமையும் கடும் சரிவை சந்தித்த நிலையில், செவ்வாயன்று வணிகத்தின்போது இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து வர்த்தகமாகி 81.53 என்ற அளவில் நிறைவடைந்தது.

புதன்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியபோதே, பண மதிப்பு வீழ்ச்சியையும், அமெரிக்க டாலர் எழுச்சியையும் நோக்கி நகர்ந்ததாக ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஸ்ரீராம் ஐயர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க.. உங்கள் மகளிடம் இதைக் கேளுங்கள்!

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT