இந்தியா

மத்திய அரசின் புதிய தலைமை வழக்குரைஞராகிறார் ஆர்.வெங்கடரமணி: குடியரசுத் தலைவர் உத்தரவு

28th Sep 2022 09:58 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞராக ஆர்.வெங்கடரமணியை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

தற்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞராக பணியாற்றிவரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை மத்திய அரசின் புதிய தலைமை வழக்குரைஞரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டார். 

அதன்படி மூத்த வழக்குரைஞர் ஆர்.வெங்கடரமணி புதிய தலைமை வழக்குரைஞராகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT